திண்டுக்கல் ஒரே பகுதியில் அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளை : போலீசார் விசாரணை

Author: Udhayakumar Raman
28 July 2021, 5:51 pm
Dgl Theft - Updatenews360
Quick Share

திண்டுக்கல் : புறநகர் பகுதியில் பகலில் வீட்டின் கதவை உடைத்து கொள்ளை பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் அருகே உள்ள நந்தவனப்பட்டி டிரஸ்சரி காலனியில் சண்முகவேல் குடியிருந்து வருகிறார். திருச்சி ரோடு அருகே கடை வைத்துள்ளார்.மனைவி வெளியூர் சென்றிருந்த நிலையில் காலையில் வீட்டை பூட்டிவிட்டு சண்முகவேல் தனது கடைக்கு சென்றுவிட்டார்.
நேற்று மாலை 5 மணியளவில் மீண்டும் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு வந்த பொழுது மர்ம நபர்களால் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு வீட்டில் பீரோவில் இருந்த ஆறரை சவரன் நகை மற்றும் ரு 10 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

இது குறித்து காவல்துறையினருக்கு புகார் அளித்ததன் பேரில் கொலை நடந்த வீட்டிற்கு வந்த தாடிக்கொம்பு போலீசார் கொள்ளைச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்கின்றனர்.

அதேபோல் திண்டுக்கல் சீலப்பாடி PWDகாலனி ரோஜா நகர் 3வது தெரு பகுதியில் வசிப்பவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் ஆர்டிஓ அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மற்றும் மகனுடன் கிருஷ்ணமூர்த்தி வசித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது மனைவி வேலைக்காக சென்று விட்டனர். அவரது மகனும் வெளியே சென்று உள்ளார். வீடு பூட்டப்பட்டிருந்தது கண்ட மர்மநபர்கள் வீட்டின் கதவை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர்.

வேலை முடிந்து வீட்டிற்கு வந்த பார்த்த கிருஷ்ணமூர்த்தி வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு உடனடியாக திண்டுக்கல் தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்து அதன் பேரில் காவல்துறையினர் வந்து விசாரணை மேற்கொண்டனர். பட்டப்பகலில் அருகே அருகே உள்ள பகுதிகளில் கொள்ளை நடந்தது இப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Views: - 161

0

0