கடத்தி சென்று ரவுடி வெட்டி கொலை:நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி..

Author: Udayaraman
1 August 2021, 6:58 pm
Quick Share

சென்னை: வில்லிவாக்கத்தில் கொலைக்கு பழிக்குப் பழியாக ரவுடி கடத்தி சென்று வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை வில்லிவாக்கம் பாரதி நகரைச் சேர்ந்தவர் அலெக்ஸ்.இவர் கடந்த ஆண்டு அதே பகுதியை சேர்ந்த கருணாகரன் என்பவரை கொலை செய்த வழக்கில் சிறை சென்று வந்துள்ளார். தற்போது பெங்களூரில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கொலை வழக்கு சம்பந்தமாக நீதிமன்றத்தில் கடந்த 30 – ம் தேதி வழக்கு விசாரணை இருந்ததால் கடந்த 28 ஆம் தேதி பெங்களூருவில் இருந்து சென்னை வந்துள்ளார். இந்நிலையில் செல்போனில் பேசிக் கொண்டே வெளியே வந்து அலெக்சை மூன்று பேர் கொண்ட கும்பல் கத்தியால் சரமாரியாக வெட்டி இழுத்துச் சென்றனர்.

இது குறித்து அலெஸ் தாயார் வில்லிவாக்கம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் தேடிவந்த நிலையில் நியூ ஆவடி ரோடு, ரயில்வே மியூசியம் அருகில் அலெக்ஸ் தலை சிதைக்கப்பட்டு இறந்து கிடப்பது தெரிய வந்தது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கடந்த ஆண்டு கருணாகரன் கொலைக்கு பழிக்குப் பழியாக இந்த கொலை நடந்தது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக வில்லிவாக்கத்தை சேர்ந்த சரவணன், ரஞ்சித் உள்ளிட்ட 3 பேரை தேடி வருகின்றனர்.

Views: - 176

0

0