ரயிலில் தவறவிட்ட 70 ஆயிரம் ரூபாய் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ரயில்வே போலீசார்

17 November 2020, 10:52 pm
Quick Share

வேலூர்: காட்பாடியில் ரயிலில் தவறவிட்ட 70 ஆயிரம் ரூபாயை மீட்டு உரியவரிடம் ரயில்வே போலீசார் ஒப்படைத்தனர்.

வேலூர் மாவட்டம். கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த அப்துல் ரஷீத்[50] இவர் சென்னையில் டீக்கடை ஒன்றில் டீ மாஸ்டராக வேலை செய்து வந்த நிலையில் நேற்று தான் சொந்த ஊருக்கு செல்ல அப்துல் ரஷீத் சென்னையிலிருந்து மங்களூர் வழியாக செல்லும் ரயிலில் கோழிக்கோடு சென்றுள்ளார். அப்போது காட்பாடி ரயில் நிலையத்தில் உணவு வாங்க ரயிலில் இருந்து இறங்கிய அப்துல் ரஷீத் தான் பயணித்த ரயிலை தவறவிட்ட,

இந்நிலையில் தன்னுடன் கொண்டுவந்த பை மற்றும் அதனுள் இருந்த ரூபாய் 70,000 தவறவிட்டதனை காட்பாடி ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்து தன் உடமைகளை  மீட்டுத் தரும்படி கூறினார். அப்துல் ரஷீத் தவறவிட்ட பை மற்றும் ரூபாய்70,000 ஜோலார்பேட்டையில் காட்பாடி இருப்புப்பாதை போலீசார் மீட்டு இன்று உரியவடம்  அதனை ஒப்படைத்தனர்.

Views: - 14

0

0