சரக்கு வாகனத்தில் இருந்த ரூ. 2 லட்சம் ரூபாய் பான் மசாலா பொருட்கள் பறிமுதல்

8 November 2020, 8:52 pm
Quick Share

கோவை: கோவையை அடுத்த பொள்ளாச்சியில் நின்று கொண்டு இருந்த சரக்கு வாகனத்தில் 2 லட்சம் ரூபாய் பான் மசாலா பொருட்களை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் இணைந்து கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோவை தேசிய நெடுஞ்சாலையில்தில்லை நகர் அம்மா உணவகம் அருகே கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறைஅலுவலர் தமிழ்ச்செல்வன், பொள்ளாச்சி உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சுப்புராஜ், வேலுச்சாமி மற்றும் மகாலிங்கபுரம் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அனாதையாக நின்று கொண்டு இருந்த கேரள மாநில பதிவு எண் கொண்ட வாகனத்தை ஆய்வு செய்தபோது,

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா, புகையிலைப்பொருட்கள் நான்கு மூட்டைகளில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ரூபாய் இரண்டு லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை கைப்பற்றி வாகனத்தின் ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் வாகனத்தின் உரிமையாளர் குறித்து விசாரணை ஈடுபட்டுள்ள அதிகாரிகள் வாகனத்தை பறிமுதல் செய்து மகாலிங்கபுரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Views: - 20

0

0