இரும்பு கடை உரிமையாளரிடம் ரூ 3 .50 லட்சம் பறிமுதல்

2 March 2021, 10:26 pm
Quick Share

வேலூர்: வேலூரில் உரிய ஆவணங்கள் இன்றி இரும்பு கடை உரிமையாளரிடம் எடுத்து வந்த ரூ 3 .50 லட்சம் ரொக்கத்தை தேர்தல் நிலை கண்காணிப்புக்குழுவினர் பறிமுதல் செய்தனர்.

வேலூர் மார்ச் 2 சட்டமன்ற தேர்தலை ஒட்டி வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்கும் பொருட்டு தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று நிலை கண்காணிப்பு குழு அலுவலர் கணேசன் தலைமையிலான குழுவினர் அலமேலு ரங்காபுரம் சர்வீஸ் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அலமேலு மங்கா புரத்தை சேர்ந்த சேர்ந்த சரவணன் என்பவர் ரூ 3 .50 லட்சம் பணத்தை வங்கியில் செலுத்துவதற்காக எடுத்துச் சென்றது தெரியவந்தது. ஆனால் ரூ 3.50 லட்சத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்து தேர்தல் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

Views: - 5

0

0