வீட்டில் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த பெண் கைது

6 February 2021, 7:54 pm
Quick Share

நாகை : நாகை அருகே வீட்டில் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த பெண்ணை போலீசார் கைது செய்து, 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சாராயம் மற்றும் பாக்கெட் போட பயன்படுத்தப்பட்ட இயந்திரத்தை பறிமுதல் செய்தனர்.

காரைக்காலில் இருந்து நாகைக்கு சாராயம் கடத்தி வரப்பட்டு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து நாகை அடுத்துள்ள செல்லூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த வீரலட்சுமி என்பவரது வீட்டில் போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வீட்டின் பின்புறம் சாராய மூட்டைகள் மண்ணுக்குள் புதைத்து வைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து 50, ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சாராயம் மற்றும் சாராய பாக்கெட் போட பயன்படுத்தப்பட்ட இயந்திரங்களை பறிமுதல் செய்த நாகை மதுவிலக்கு பிரிவு போலீசார், வீட்டில் சாராய பாக்கெட் போட்டு விற்பனை செய்துவந்த செல்லூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த வீரலட்சுமி என்ற பெண்ணை கைது செய்தனர்.

Views: - 18

0

0