திருச்சி விமான நிலையத்தில் 1 கோடி மதிப்பிலான தங்க கட்டி மற்றும் நகைகள் பறிமுதல்

12 August 2020, 9:09 pm
Quick Share

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் 1 கோடி மதிப்பிலான தங்க கட்டி மற்றும் நகைகளை சுங்கதுரை அதிகாரிகள் பறிமுதல் செய்து, வந்தே பாரத் திட்டத்தில் தீழ் வந்த 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்

உலக முழுவதும் கொரோனா வெற்று பாதிப்பை அடுத்து விமானங்கள் இயக்கம் நிறுத்தப்பட்டன. இந்தியாவிலும் இதே நடைமுறை வழிமுறை படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து வெளிநாடுகளிலிருந்து வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இந்தியர்களை விமானம் மூலம் இந்திய அரசு அழைத்து வந்தது. இதன் ஒரு பகுதியாக நேற்று மலேசியா தலைநகர் கோலாலம்பூரிலிருந்து இருந்தது பயணிகளை ஏற்றி வந்த பயணிகளின் உடைமைகளை வான் சுங்க துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பாஸ்கர், ஒரத்தநாடு பகுதி இய சேர்ந்த ராஜா, மானாமதுரை பகுதியை சேர்ந்த
உதயன், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த லோகு ஆகியோர் தங்களது உரிமைகளில் 7.7கிலோ எடையுள்ள தங்க செயின் மற்றும் தங்க கட்டிகளை மறைத்து எடுத்து வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்து நான்கு பேரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிடிப்படிப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் ரூபாய் ஒரு கோடி என கூறப்படுகிறது.

Views: - 11

0

0