கருப்பு பட்டை அணிந்து பணிபுரிந்த ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள்

14 August 2020, 7:08 pm
Quick Share

ஈரோடு: கொரோனோ தொற்று சமயத்தில் பணிபுரிந்த ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்காத அரசை கண்டித்து ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் கருப்பு பட்டை அணிந்து பணிபுரிந்தனர்.

தமிழகம் முழுவதும் கொரோனோ தொற்று பரவலை கட்டுப்படுத்த அனைத்து துறை ஊழியர்களும் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் ஊக்கத்தொகை வழங்கி வருகிறது. இதில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தமிழக அரசு எவ்வித ஊக்கத்தொகையும், வழங்கவில்லை என தெரிவித்த ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் மற்ற துறை ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை போல் ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கக்கோரியும் ,

அதே போல் சுதந்திர தினவிழாவில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கும் முன்களப்பணியாளர்களுக்கு போல் விருது வழங்கக்கோரியும் தமிழகம் முழுவதும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கருப்பு பட்டை அணிந்து பணிபுரிந்து வருகின்றனர். இதே போல் ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களும் கருப்புப்பட்டை அணிந்து பணியாற்றி வருகின்றனர்.

Views: - 5

0

0