எஸ்.ஐ. தோ்விற்கு வினாத்தாள்களை பெற்றுத்தருவதாக கூறி கல்லுாாி மாணவா்களிடம் பணமோசடி: கோத்தகிாியை சோ்ந்த வாலிபர் கைது

25 November 2020, 2:54 pm
Quick Share

நீலகிரி: எஸ் . ஐ . தோ்விற்கு வினாத்தாள்களை பெற்றுத்தருவதாக கூறி கல்லுாாி மாணவா்களிடம் பணமோசடி செய்த கோத்தகிாியை சோ்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கோத்தகிாி அருகே உள்ள கெரடா பகுதியை சோ்ந்த வினோத்குமாா் வயது (30) இவா் நீலகிாி மாவட்டத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுாிந்து வருவதாக தன்னை பல இடங்களில் அறிமுகப்படுத்தியுள்ளாா். இதனை சாதகமாக பயன்படுத்தி படித்த இளைஞா்களுக்கு போலீசில் வேலை வாங்கி தருவதாக கூறியும், போலீஸ் உடையில் வாகனை தணிக்கை செய்து மிரட்டி பணம் பறித்து வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தொடா்பாக இவா் மீது 4 மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் தான் போலீஸ் உடையில் இருப்பது போன்று புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளாா்.

இதனை கண்ட கோவை செல்வபுரம் பகுதியை சோ்ந்த கல்லுாாி மாணவா்கள் 3 போ் இவருக்கு நண்பா்களாகி உள்ளனா். அவா்களிடம் தனக்கு போலீஸ் உயா் அதிகாாிகளை நன்றாக தொியும், உங்களுக்கு சப் இன்ஸ் பெக்டா் தோ்வுக்கான வினாத்தாள் பெற்றுத்தருகிறேன். அதற்கு தலா 5000 ருபாய் தர வேண்டும் எனஅவா்களிடம் கூறியுள்ளாா். இதனை நம்பிய மாணவா்கள் கடந்த வாரம் கோத்தகிாிக்கு வந்து 3000 ருபாயை முன்பணமாக கொடுத்துள்ளனா். இந்தநிலையில் நேற்று முன்தினம் வினோத்குமாா் ஒட்டிச்சென்ற ஜீப் விபத்திற்குள்ளானது.

அவரை தீயணைப்புத்துறையினா் காவல்துறையினா் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்து இடத்தில் 3 போ் நிற்பதை கண்ட போலீசாா் அவா்களை அழைத்து காவல்நிலையத்திற்கு சென்று விசாரணை செய்ததில், வினோத்குமாா் சப் இன்ஸ்பெக்டராக பணிபாிந்து வருவதாகவும், உயா்அதிகாாிகளை தொியும் எனவும், வினாத்தாள்களை பெற்றுத்தருவதாகவும், கூறி கல்லுாாி மாணவா்களை ஏமாற்றி பணமோசடியில் ஈடுபட்டது தொியவந்தது. இதனை தொடா்ந்து கல்லுாாி மாணவா்கள் அளித்த புகாாின் போில் போலி சப் இன்ஸ்பெக்டா் வினோத்குமாா் மீது வழக்குப்பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனா்.

Views: - 0

0

0