தேர்தல் விதிமுறைகளை மீறி சாலவாக்கம் ஊராட்சி செயலர் சஸ்பெண்ட்

Author: Udhayakumar Raman
29 March 2021, 6:31 pm
Quick Share

காஞ்சிபுரம்: தேர்தல் விதிமுறைகளை மீறி திமுக வேட்பாளருக்கு மாலை அணிவித்து ஆதரவு செலுத்திய சாலவாக்கம் ஊராட்சி செயலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

காஞ்சிபுரம் மாவட்டம் , உத்திரமேரூர் ஒன்றியம் , சாலவாக்கம் ஊராட்சி செயலராக பணிபுரிந்து வருபவர் சதீஷ். இவர் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிடும் சுந்தர் அவர்களை தனது கிராமத்தை சேர்ந்த பொதுமக்களுடன் சேர்ந்து அவரது இல்லத்தில் நேற்று சந்தித்து ஆதரவு தெரிவித்ததாக தேர்தல் அலுவலருக்கு‌ ஆதாரபூர்வமாக புகார் வந்தது. இது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் விசாரணை நடத்தியதில், தேர்தல் விதிமுறைகளை மீறியதற்காக சதீஷ்சை சஸ்பெண்ட் செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Views: - 58

0

0