16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சேல்ஸ்மேன் கைது

Author: Udhayakumar Raman
16 September 2021, 1:57 pm
Quick Share

சென்னை: சென்னை அருகே 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சேல்ஸ்மேனை போக்சோவில் போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த 33 வயது பெண் புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில்  16 வயதுடைய தனது மூத்த மகளை ஆசை வார்த்தை கூறி புளியந்தோப்பு தட்டாங்குளம் பகுதியைச் சேர்ந்த நரேஷ் என்கின்ற நரேந்திரன் என்ற நபர் பாலியல் தொல்லை கொடுத்து வருவதாகவும், இதனால் எனது மகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாகவும் புகார் மனுவில் கூறியிருந்தார்.

இதனை அடுத்து வழக்கு பதிவு செய்த புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அனுராதா , நரேந்திரனை கைது செய்து விசாரணை நடத்தினார்.விசாரணையில் நரேந்திரன் தனியார் நிறுவனத்தில் சேல்ஸ்மேன் வேலை செய்து வருவதாகவும் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி நரேந்திரன் அடிக்கடி பாலியல் வல்லுனர்வில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து நரேந்திரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Views: - 114

0

0