ஆண்டாள் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

15 January 2021, 2:04 pm
Quick Share

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இன்று மாட்டுப் பொங்கலை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

தமிழக அரசின் முத்திரைச் சின்னமாக விளங்கும் ராஜ கோபுரம் அமைந்திருக்கும் உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இன்று மாட்டு பொங்கலை முன்னிட்டும் தொடர் விடுமுறை காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து ஸ்ரீஆண்டாள் ரங்கமன்னாரை சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல முககவசம் அணிந்தும் சமூக இடைவெளியை பின்பற்றியும் தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

Views: - 3

0

0