மனித மாமிசம் சாப்பிட்டு சாமியாட்டம்..! தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்

Author: Udayaraman
26 July 2021, 10:01 pm
Quick Share

தென்காசி மாவட்டத்தின் கல்லூரணி கிராமத்தில் உள்ள சுடலை மாடசாமி கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் திருவிழா நடக்கும். இந்தக் கோயிலை உள்ளூர்க் காரர்கள் காட்டுக் கோயில் என்றும் அழைப்பதுண்டு. இப்படி கோயில் திருவிழாவின் போது, சில சாமியாடிகள், மனித மண்டை ஓட்டை வைத்தும், மனித மாமிசத்தைச் சாப்பிட்டும் ஆர்ப்பரித்து ஆட்டம் போட்டு உள்ளனர். இது குறித்த வீடியோவும், செய்தியும் அக்கம் பக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தின.

இதைத் தொடர்ந்து உள்ளூர் காவல் துறையினர் சாமியாடிகள் மீதும், திருவிழா ஒருங்கிணைப்புக் கமிட்டி மீதும் வழக்குப் பதிவு செய்து உள்ளனர். மேலும், எந்த இடத்திலிருந்து மனித மாமிசமும், மண்டை ஓடும் எடுத்து வரப்பட்டது என்பது குறித்தும் போலீஸார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.இந்தக் கோயில் திருவிழாவின் போது, இப்படி மனித உடல் உறுப்புகளை வைத்து சாமியாடுவது இது முதல் தடவை இல்லையென்றும், இதற்கு முன்னரும் இதைப் போன்ற சம்பவங்கள் நடந்திருக்கிறது என்றும் உள்ளூர்க் காரர்கள் தகவல் தெரிவித்து அதிர்ச்சி கொடுக்கின்றனர்.

Views: - 200

0

0