ராஜபாளையத்தில் மணல் திருட்டு: 4 பேர் கைது, டிராக்டர் மணல் பறிமுதல்

18 April 2021, 10:52 pm
Quick Share

விருதுநகர்: ராஜபாளையத்தில் அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் திருடிய 4 பேரை போலீஸார் கைது செய்து டிராக்டர் மணலையும் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

ராஜபாளையம் அய்யனார் கோவில் சாலை தனியார் பள்ளி அருகிலும் மற்றும் அய்யனார் கோவில் சாலை ஆறாவது மைல் டேம் அருகிலும் வடக்கு காவல் நிலைய போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இரண்டு டிராக்டரை நிறுத்தி சோதனை செய்ததில் அனுமதியின்றி சட்ட விரோதமாக மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. விசாரணையில் சுந்தரராஜபுரத்தைச் சேர்ந்த பொன்ராஜ் (28) செந்தில்குமார் (22) மற்றும் கணபதிசுந்தர நாச்சியார்புரத்தை சேர்ந்த தொந்தியப்பன்(30) மற்றும் சுந்தரராஜபுரத்தை சேர்ந்த கார்த்திகேயன்(22) என தெரியவந்தது.போலீஸார் 4 பேரையும் கைது செய்து, இரண்டு டிராக்டர் மற்றும் மணலையும் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

Views: - 13

0

0