மணல் லாரி – இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு

7 November 2020, 4:54 pm
Quick Share

விருதுநகர்: திருச்சுழியில் நடந்த சாலை விபத்தில் மணல் லாரி மோதி இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் காயம் அடைந்து மருத்துசமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் நரிக்குடியை சேர்ந்த பாண்டி, முருகேசன் ஆகிய இருவரும் வேலை காரணமாக இரு சக்கர வாகனத்தில் திருச்சுழி நகர்ப்பகுதியில் வந்த போது எதிரே வந்த மணல் லாரி இரு சக்கர வாகனத்தில் நேருக்கு நேர் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த பாண்டி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இரு சக்கர வாகனத்தில் வந்த மற்றொரு நபர் முருகேசன் தலையில் பலத்த காயமடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த திருச்சுழி காவல்துறையினர் உயிருக்கு போராடிய முருகேசனை மீட்டு திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனார்.

இந்த விபத்து குறித்து திருச்சுழி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சுழி நகர்ப் பகுதிகளில் மணல் லாரிகள் அதிவேகத்துடன் செல்லுவதால் விபத்து ஏற்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து வாகனங்கள் வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 19

0

0