கருமாரியம்மன் கோவிலில் சசிகலா சாமி தரிசனம்

11 April 2021, 8:22 pm
Quick Share

திருவள்ளூர்: திருவேற்காடு கருமாரியம்மன் கோவில் 108 சங்காபிஷேக விழாவில் சசிகலா பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் தோழியான சசிகலா இவர் தமிழகம் முழுவதும் பல்வேறு கோவில்களில் தொடர்ந்து வழிபாடு நடத்தி வருகிறார். இந்த நிலையில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த திருவேற்காடு
தேவி கருமாரியம்மன் கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்தார். கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் பங்கேற்று 108 சங்காபிஷேக விழா யாகபூஜைகளில் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தார். அப்போது கோவில் அமர்ந்து சிறிது நேரம் தியானத்தில் ஈடுபட்டார்.

Views: - 12

0

0