சதுரகிரி கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

Author: Udayaraman
1 October 2020, 3:24 pm
Quick Share

விருதுநகர்: பெளர்ணமியை முன்னிட்டு சதுரகிரி கோவிலில் அதிகாலையில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் தரை மட்டத்திலிருந்து 4500 உயரத்தில் உள்ளது. இந்த போயிருக்கும் மாதந்தோறும் அமாவாசை 4 நாட்கள், பெளர்ணமி 4 நாட்கள் என மொத்தம் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதோஷம் மட்டும் பெளர்ணமியை முன்னிட்டு கடந்த 29 ஆம் தேதி முதல் நாளை சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று பெளர்ணமியை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பக்தர்கள் உடல் பரிசோதனை, சானிடைசர் கொண்டு கை கழுவிய பின்னரே பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். ஓரளவிற்கு மழை பெய்தாலே வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழலில் தற்போது மழை பெய்யும் காலம் என்பதால் பக்தர்களின் பாதுகாப்பிற்கு தீயணைப்பு உள்ளிட்ட எந்த பாதுகாப்பு வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Views: - 41

0

0