இருசக்கர வாகனத்தில் சென்றவரிடம் இரண்டு லட்சம் ரூபாய் வழிப்பறி: மர்மநபர்களுக்கு போலீசார் வலை

11 November 2020, 10:54 pm
Quick Share

ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த புஞ்சைபுளியம்பட்டியில் இரண்டு லட்சம் ரூபாய் வழிப்பறி செய்த இருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்

கோவை மாவட்டம், கணுவக்கரை ஆலாம்பாளையத்தை சேர்ந்த விவசாயி பழனிச்சாமி இவர் இன்று மதியம் புஞ்சை புளியம்பட்டியில் உள்ள கனரா வங்கியில் நகைகளை அடமானம் வைப்பதற்காக சென்றுள்ளார். இதில் அடமானம் வைத்த பணம் 2 லட்சம் ரூபாயை பெற்றுக்கொண்டு வங்கியை விட்டு வெளியே வந்து தனது இருசக்கர மீது பணத்தை வைத்துள்ளார். அப்போது பின்பகுதியில் யாரோ அவரது கழுத்தின் மீது கை வைப்பதை உணர்ந்த பழனிச்சாமி திரும்பிப் பார்த்தபோது யாரும் இல்லை.

பின்பு வாகனத்தை எடுக்க முயற்சித்த போது வேறு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் பழனிச்சாமியின் வாகனத்தின் மேல் வைத்திருந்த பணப்பையை எடுத்துக்கொண்டு மாயமாய் மறைந்தனர். பணத்தை பறிகொடுத்த பழனிச்சாமி உடனடியாக புஞ்சைபுளியம்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் புஞ்சைபுளியம்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அப்பகுதியை சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகளில் பணத்தை பறித்து சென்ற மர்ம நபர்களின் உருவம் ஏதேனும் பதிந்து உள்ளனவா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 0

0

0