சத்தியமங்கலத்தில் அதிமுக வேட்பாளர் துண்டு பிரசுரம் வழங்கி தீவிர வாக்கு சேகரிப்பு

Author: Udhayakumar Raman
27 March 2021, 8:30 pm
Quick Share

ஈரோடு: பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சத்தியமங்கலம் நகர் பகுதிகளில் அதிமுக வேட்பாளர் பண்ணாரி வீதி‌ வீதியாக சென்று துண்டு பிரசுரம் வழங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சத்தியமங்கலம் நகர்ப்பகுதியில் உள்ள அண்ணாநகர், கோவிந்தராஜபுரம், கூத்தனூர், திருநகர்காலனி உள்ளிட்ட இடங்களில் பவானிசாகர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பண்ணாரி வீதி வீதியாக சென்று பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட வேட்பாளர் பண்ணாரிக்கு அப்பகுதி பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அப்பகுதி பொதுமக்களிடம் அதிமுக அரசின் தேர்தல் அறிக்கையில் உள்ள பல நல்ல திட்டங்களை எடுத்துரைத்து இரட்டை இலைச் சின்னத்தில் வாக்களித்து தன்னை வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

Views: - 63

0

0