வனப்பகுதியில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு துவக்கம்: செய்தியாளருக்கு அனுமதியில்லை

6 March 2021, 2:03 pm
Quick Share

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு நேற்று துவங்கியது. இதில் செய்தியாளருக்கு அனுமதியில்லை என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட அனைத்து வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி நேற்று துவங்கியது. நேற்று முதல் 6 நாட்களுக்கு தொடர்ந்து நடைபெற உள்ளது. சத்தியமங்கலம், பவானிசாகர், கேர்மாளம் உள்ளிட்ட 10 வனச்சரகங்களில் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது.‌ வனத்துறை ஊழியர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய 3 நபர்கள் தனி தனி குழுக்களாக பிரிக்கப்பட்டு மொத்தம் 300 பேர் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் மூன்று நாட்கள் பகுதி நேர கணக்கெடுப்பும், மூன்று நாட்கள் நேர்கோட்டு பாதை கணக்கெடுப்பும் நடைபெற உள்ளது.

சென்ற டிசம்பர் மாதம் வனவிலங்குகளின் கணக்கெடுப்பு நடைபெற்ற போது முதல் நாளே காட்டு யானை தாக்கியதில் வனக்காவலர் சதீஸ்குமார், விளாத்திகுளத்தை சேர்ந்த தன்னார்வலர் முத்து பிரபாகர சேரபாண்டியன் ஆகியோர் உயிரிழந்ததால் கணக்கெடுக்கும் பணி நிறுத்தப்பட்டது. இதனால் நேற்று துவங்கிய கணக்கெடுப்பில் தன்னார்வலர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை வனத்துறை ஊழியர்கள் மட்டுமே ஈடுபட்டுள்ளனர். இந்த முறை நடைபெற்ற வனவிலங்குகள் கணக்கெடுப்பில் செய்தியாளர்களுக்கு அனுமதி இல்லை என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Views: - 2

0

0