உரிய ஆவணம் இன்றி எடுத்துவரப்பட்ட 3 லட்சத்து 40ஆயிரம் ரூபாய் பறிமுதல்

Author: Udhayakumar Raman
16 March 2021, 9:32 pm
Quick Share

ஈரோடு: சத்தியமங்கலம் பண்ணாரி சோதனைசாவடி அருகே உரிய ஆவணம் இன்றி எடுத்துவரப்பட்ட 3 இலட்சத்து 40ஆயிரம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் உள்ள பண்ணாரி சோதனை சாவடி அருகே மகாலிங்கம் தலைமையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கோவையில் இருந்து திம்பம் மலைப்பாதை நோக்கி நோக்கி வந்த கொண்டிருந்த பிக்கப் வேனை பிடித்து சோதனை செய்ததில் அதில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட 3 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணம் இருப்பது தெரியவந்தது.

விசாரணையில் பிக்கப் வேனில் வந்த நபர் கர்நாடக மாநிலம் சாத்ஹள்ளி பகுதியைச் சேர்ந்த சபீர் அஹமத் என்பதும் இவர் கோவையில் ஆடு வியாபாரம் முடித்துவிட்டு மைசூருக்கு திரும்பிக்கொண்டிருந்தது தெரியவந்தது. இருப்பினும் அவர் எடுத்து வந்த பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாததால் அவரிடமிருந்த பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சத்தியமங்கலம் வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.

Views: - 38

0

0