சத்தியமங்கலம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை
6 August 2020, 10:28 pmஈரோடு: சத்தியமங்கலம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் விடாமல் பெய்த மழையின் காரணமாக குளிர்ந்த சூழல் நிலவியது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் வெயில் வாட்டி வந்தது இந்நிலையில் மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் இரவு லேசான சாரல் மழை பெய்யத்துவங்கியது பின்னர் கன மழையாக மாறியது சுமார் ஒரு மணி நேரம் விடாமல் பெய்த மழையின் காரணமாக சாலைகளில் வௌ;ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் குளிர்ந்த சூழல் நிலவியது. சுமார் ஒரு மணி நேரம் விடாமல் பெய்த மழையின் காரணமாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த நான்கு நாட்களாகவே சத்தியமங்கலம் பகுதியில் இரவு நேரங்களில் விடாமல் மழை பெய்து வருவதால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.