வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டம்…

Author: kavin kumar
30 September 2021, 8:39 pm
Quick Share

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே 150 ஆண்டுகளாக குடியிருக்கும் பட்டியலின மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டம் …

சத்தியமங்கலம் அடுத்துள்ள தோப்பூரில் 150 ஆண்டுகளாக குடியிருக்கும் பட்டியலின மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும், ராஜன்நகர் கிராமத்தில் வசிக்கும் பட்டியலின மக்களுக்கு வழங்கிய 40 ஏக்கர் விவசாய நிலத்திற்கு பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தை நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று முற்றுகையிட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ரகுராமன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். அதனைத் தொடர்ந்து வட்டாட்சியர் அலுவலகம் வாயில் முன்பு தரையில் அமர்ந்து காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்களது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி வட்டாட்சியரிடம் மனு வழங்கினர்.

Views: - 224

0

0