குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் பொதுமக்கள் சாலை மறியல்

19 January 2021, 5:47 pm
Quick Share

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே உள்ள தாண்டாம்பாளையம் குமரன் நகர் பகுதியில் ஒரு மாத காலமாக சரியான முறையில் குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள தாண்டாம்பாளையம் குமரன் நகர் பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் ஒரு மாத காலமாக சரியான முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என பவானிசாகர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பலமுறை முறையிட்டும் பயன் அளிக்காத காரணத்தால் ஆத்திரமடைந்த

பொதுமக்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் சத்தியமங்கலம் பவானிசாகர் சாலையில் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பவானிசாகர் காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனால் சத்தியமங்கலம் பவானிசாகர் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Views: - 0

0

0