நகர நிலவரித்திட்ட அலுவலகத்தில் அதிகாரிகள் சோதனை

2 February 2021, 10:42 pm
Quick Share

ஈரோடு: சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள நகர நிலவரித்திட்ட அலுவலகத்தில் ஈரோடு ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் ரேகா தலைமையிலான அதிகாரிகள் 6 பேர் சோதனை நடத்ததினர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நகர நிலவரித்திட்ட அலுவலகம் தனியாக செயல்பட்டு வருகிறது. இன்று மாலை அந்த அலுவலகத்திற்கு வந்த ஈரோடு ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் ரேகா தலைமையிலான ஆறு பேர் கொண்ட அதிகாரிகள் அதிரடியாக நுழைந்து விசாரணையை துவக்கினர்.

இந்த அலுவலகத்தில் பட்டா மாறுதல் மற்றும் பல்வேறு பணிகளுக்காக லஞ்சம் கேட்பதாக வந்த புகாரின் அடிப்படையில், தனி வட்டாட்சியர் வேல்முருகன், நில அளவை ஆய்வாளர் பன்னீர்செல்வம் ஆகியோரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து சுமார் ஐந்து மணி நேரமாக நடைபெற்று வரும் விசாரணையால் பரபரப்பு நிலவுகிறது.

Views: - 5

0

0