ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி: டாஸ்மாக தற்காலிகமாக மூடல்…

5 August 2020, 9:50 pm
Quick Share

விருதுநகர்: சாத்தூர் அருகிலுள்ள ஏழாயிரம் பண்ணை செயல்பட்டு வரும் அரசு மதுபானக்கடையில்பணியாற்றிய ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் கடையை தற்காலிகமாக பூட்டி சீல் வைக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் தோற்று தீவிரமாக பரவி வரும் வேளையில் ஊரடங்கு ஓரளவு தளர்த்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏழாயிரம் பண்னையில் செயல்பட்டு வந்த அரசு மதுபானக் கடையில் பணியாற்றிய ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவரை சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். மேலும் அவருடன் பணியாற்றியவர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது . இன்று அவர் பணியாற்றிய மதுபானக்கடையை தற்காலிகமாக பூட்டி சீல் வைக்கப்பட்டது . மேலும் இந்த பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது.

Views: - 11

0

0