சத்தியமங்கலம் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மழை
12 September 2020, 10:16 pmஈரோடு: சத்தியமங்கலம் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணிநேரம் மழை பெய்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் மாலை மழை பெய்ய தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரம் விடாமல் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கடந்த சில நாட்களாக இப்பகுதியில் காலை நேரங்களில் வெயிலும், மாலை நேரங்களில் குளிர்ந்த சூழலும் நிலவி வந்த நிலையில் இன்று பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. சில நாட்களாகவே இப்பகுதியில் மாலை நேரங்களில் மழை பெய்வதால் சத்தியமங்கலம் பகுதி பொதுமக்களும் மற்றும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.
0
0