ஆற்றில் குதித்த பள்ளி மாணவியை காப்பாற்ற சென்ற வாலிபரும் பலி….
Author: kavin kumar3 October 2021, 1:27 pm
தஞ்சை: தஞ்சையில் புதுஆற்றில் குதித்த பள்ளி மாணவியை காப்பாற்ற சென்ற வாலிபரும் உயிரிழந்தார்.
தஞ்சை மானம்புச்சாவடி வைகோல்கார தெருவை சேர்ந்தவர் ஷேக் மைதீன். இவருடைய மகள் ஆயிஷா பேகம். இவர் மானம்புச்சாவடி யில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார் இந்த நிலையில் நேற்று தஞ்சை காந்திஜி சாலையில் உள்ள ஆற்று பாலத்தின் அருகே ஆயிஷா பேகம் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் கல்லணை கால்வாய் ஆற்றில் குதித்தார். இதனையடுத்து தண்ணீரில் அவர் இழுத்துச் செல்வதைப் பார்த்த அதே பகுதியைச் சேர்ந்த பிளக்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த முகிலன் என்பவரும் அவருடன் வேலை பார்க்கும் மற்றொரு வாலிபரும் வேகமாக ஓடி வந்து ஆற்றில் குதித்து அவரை காப்பாற்ற முயன்றனர். தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் ஆற்றில் குதித்த வாலிபர்களின் ஒருவர் படித்துறையில் ஏறிவிட்டார்.
ஆனால் ஆயிஷா பேகத்தை காப்பாற்ற சென்ற முகிலன் என்பவர் தண்ணீரில் மூழ்கினார். பின்பு தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்பு அங்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் ஆற்றில் குதித்த மற்றும் தண்ணீரில் மூழ்கி இரண்டு பேரையும் தேடி அவர்களில் 2 பேர் உடல் வெட்டிக்காடு அருகே ஆற்றங்கரை ஓரம் காணப்பட்டது. இதனையடுத்து அவர்களின் உடல் கைப்பற்றப்பட்டது. 2 உடலையும் கைப்பற்றி தீயணைப்புத்துறையினர் தஞ்சை கிழக்கு காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து உடலை கைப்பற்றிய போலீசார் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
0
0