பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாமல் வரும் 5ம் தேதி பள்ளிகளை திறக்ககூடாது: அதிமுக சட்டமன்ற கட்சித்தலைவர் வலியுறுத்தல்

By: Udayaraman
2 October 2020, 3:53 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நிலையில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாமல் வரும் 5ம் தேதி பள்ளிகளை திறக்ககூடாது என அதிமுக சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்.

புதுச்சேரியில் உள்ள அஇஅதிமுக தலைமை கழகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன், கொரோனா பாதிப்பை பொறுத்து மாநில அரசுகள் அக்டோபர் 15ம் தேதிக்கு பிறகு பள்ளிகளை திறக்கலாம் என அறிவித்துள்ள நிலையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள புதுச்சேரியில் வரும் 5ம் தேதி முதல் பள்ளிகளை திறப்பது என்பது கண்டிக்கதக்கது என்றும், உரிய பாதுகாப்பு நடைமுறைகளை எடுக்காமல் பள்ளிகளை திறத்தால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு முதல்வர் நாராயணசாமியும் ஆளும் திமுக காங்கிரஸ் கூட்டணியும் பொறுப்பேற்க வேண்டும் எனவும்,

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் திமுக தலைவர் ஸ்டாலின் புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு குறித்து பேசாமல் இரட்டை வேடம் போடுவதாகவும் அன்பழகன் குற்றம்சாட்டினார். மேலும் பேசிய அவர் மத்திய அரசின் வழிகாட்டுதல் படி ஒரு சுகாதார குழுவை அமைத்து பள்ளிகளில் முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்த பிறகே பள்ளிகளை திறக்க துணைநிலை ஆளுநர் உத்தரிவிட வேண்டும் என்றும் அதற்கு முன்னதாக பள்ளிகள் திறக்கப்படும் என்ற அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Views: - 37

0

0