இராகியில் அனுசரனை ஆய்வுத் திடல்கள் பற்றி விஞ்னானிகள் ஆய்வு

21 November 2020, 3:36 pm
Quick Share

தருமபுரி: வத்தல்மலை பகுதியில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் இராகியில் அனுசரனை ஆய்வுத் திடல்கள் பற்றி விஞ்னானிகள் ஆய்வு செய்தனர்.

தருமபுரி மாவட்டத்தின் மலைக்கிராமமான வத்தல்மலை பகுதியில் இராகி, சாமை, பனிவரகு மற்றும் திணை போன்ற சிறுதானியங்கள் அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கர்கத்தின் உயர் விளைச்சல் இரகங்களான இராகி கோ. 15, சாமை கோ 4 மற்றும் பனிவரகு கோ. (பி.வி) 5 ஆகியவை மாநில திட்டக் குழுவின் திட்டத்தின் கீழ் செயல்விளக்கங்கள் மூலம் பரவலாக்கம் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இராகியில் புதிய பயிர் விளைச்சல் இரகங்களைப்பற்றி அனுசரனை ஆய்வு திடல்கள் பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் வத்தல்மலை கிராமமான பெரியூரில் அமைக்கபட்டுள்ளன.

இதில் கோ (இரா). 15 மற்றும் எம். எல். 365 ஆகிய இரகங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வளர்ப்பு இராகியோடு ஒப்பீடு செய்து விவசாயிகளின் வயல்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன் செயல் திறனை வயல்வெளியில் ஆய்வு செய்ய தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கர்கத்தின் பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் துறை இயக்குநர் கீதா தலைமையில் விஞ்னானிகள் கொண்ட குழு வத்தல்மலை பெரியூர் கிராமத்தைச் சார்ந்த் முன்னோடி விவசாயிகளின் வயலில் ஆய்வு மேற்கொண்டது. அப்பொது விவசாயிகள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

Views: - 0

0

0