கடலில் மிதக்கும் லட்சம் கொரோனா மாஸ்க்: வைரலாகும் கிளினிங் வீடியோ!

22 January 2021, 5:27 pm
Quick Share

புதுச்சேரி: முறையாக அப்புறப்படுத்தாத காரணத்தினால் கடலின் ஆழப் பகுதியில் பயனற்ற முகக் கவசங்கள் கிடக்கின்றன.

புதுச்சேரி மற்றும் தமிழக பகுதியில் ஆழ்கடல் நீச்சல் பயிற்சி நடத்தி வருபவர் அரவிந்த். புதுச்சேரியை சேர்ந்த இவர் கொரோனா காலத்தில் மக்கள் நடமாட்டம் இன்றியும் பயனற்ற பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் இன்றி கடலின் ஆழப் பகுதியில் சுத்தமாக இருப்பதாக சில மாதங்களுக்கு முன்பு ஆழ்கடலுக்கு சென்று வீடியோ காட்சிகளை வெளியிட்டார். அண்மையில் பெய்த தொடர் மழை காரணமாக ஆழ்கடலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை அவர் கண்டறிய சென்றார்.

அப்போது பொதுமக்கள் பயன்படுத்திய முக கவசங்களை முறையாக அப்புறப்படுத்தாமல் தூக்கி வீசியதால் அவை மழை வழியாக கடலுக்குள் வந்துள்ளன. கடலின் ஆழப் பகுதியில் பயனற்ற முகக் கவசங்கள் கிடப்பதை அவர் கண்டறிந்து அவற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார். பொதுமக்கள் முக கவசத்தை முறையாக அப்புறப்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Views: - 13

0

0