சென்னை சில்க்ஸ் ஜவுளி கடைக்கு சீல்

13 January 2021, 5:54 am
Quick Share

தூத்துக்குடி: விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட தூத்துக்குடி சென்னை சில்க்ஸ் ஜவுளி கடைக்கு தூத்துக்குடி மாநகராட்சி மீண்டும் சீல் வைத்துள்ளது.

தூத்துக்குடி விஇ சாலையில் சென்னை சில்க்ஸ், ஸ்ரீ குமரன் தங்கமாளிகை கடைகள் செயல்பட்டு வருகிறது இந்த கடைகளுக்குப் பின்பகுதியில் சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் சூப்பர் மார்க்கெட் செயல்பட்டு வந்த கட்டிடம் இருக்கிறது. இந்த இரண்டு கட்டிடத்திற்கும் இடையே போதிய இடைவெளி இல்லை விதிமுறையை மீறி கட்டிடம் கட்டப்பட்டு உள்ளதாக

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஏற்கனவே சென்னை சில்க்ஸ் ஜவுளி கடைக்கு தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் சீல் வைத்தது. இந்த நிலையில் விதிமுறைகளை சரி செய்வதான நிபந்தனையுடன் இரண்டு மாதமங்களுக்கு முன்பு சென்னை சில்க்ஸ் மீண்டும் திறக்கப்பட்டது. ஆனால் இதுவரை நிபந்தனைகளை நிறைவேற்றவில்லை என்று மாநகராட்சி நிர்வாகம் இன்று மீண்டும் கடைக்கு சீல் வைத்துள்ளது.

Views: - 2

0

0