அனுமதியின்றி 40 ஆண்டுகாலமாக செயல்பட்ட தனியார் உணவிற்கு சீல்

Author: Udhayakumar Raman
22 September 2021, 5:33 pm
Quick Share

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாநகராட்சியின் அனுமதியின்றி 40 ஆண்டுகாலமாக செயல்பட்ட தனியார் உணவிற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் 10 கடைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

தஞ்சை மாநகராட்சியில் ஸ்மார்ட் திட்டப் பணிகளின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் மாநகராட்சி சொந்தமான பழைய வணிக வளாகங்கள் இடிக்கப்பட்டு, புதிதாக கட்டப்பட்டு வருகிறது. மேலும் 100 ஆண்டு காலமாக மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில், குத்தகை காலம் முடிந்தும் இடங்களை ஒப்படைக்காத இடங்களை மாநகராட்சி அதிகாரிகள் தினம் தினம் கையகப் படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மாநகராட்சிக்கு சொந்தமான பழைய பேருந்து நிலையம் அருகே 40 ஆண்டுகளாக உரிய ஆவணங்கள் இன்றி செயல்பட்ட தேவர் உணவகத்திற்கு அதிகாரிகள் இன்று காலை பூட்டி சீல் வைத்தனர், மேலும் மின்சார இணைப்பையும் துண்டித்தனர். அருகில் உள்ள மேலும் 10 கடைகளுக்கும் அறிவிப்பு நோட்டீஸ் வழங்கி உள்ளனர். வருகிற 28-ஆம் தேதிக்குள் கடையை காலி செய்யவில்லை என்றால், பூட்டி சீல் வைக்கப்படும் எனவும் எச்சரித்து உள்ளனர்.

Views: - 93

0

0