பிளாஸ்டிக் பைகளை தயாரித்த தொழிற்சாலைக்கு சீல்

Author: kavin kumar
3 October 2021, 7:31 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் அரசால் தடை செய்யப்பட்டு ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளை தயாரித்த தொழிற்சாலைக்கு மாசு கட்டுப்பட்டு அதிகாரிகள் சீல் வைத்தனர்

புதுச்சேரி அரசு ஒரு முறை பயன்படுத்தப்படும் மெல்லிய பிளாஸ்டிக் பொருட்களான பைகள், குவளைகள், தட்டுகள், போன்ற எட்டு விதமான பொருட்களை உற்பத்தி செய்ய, விற்க, பயன்படுத்த தடை விதித்துள்ளது. புதுச்சேரி மாசு கட்டுப்பாடு குழுமம், இத்தகைய பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை, விற்பனை செய்யும் கடைகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றது. இந்நிலையில், சுற்றுச்சூழல் துறை செயலர் சுமிதா உத்தரவின் பேரில்,

புதுச்சேரி சீனியர் சுற்றுச்சூழல் பொறியாளர் ரமேஷ், பாகூர் தாசில்தார் சுரேஷ்ராஜ், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு குழும அதிகாரிகள் காட்டுக்குப்பம் தொழிற்பேட்டையில் உள்ள நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அரசால் தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தப்படும் கேரிபேக் உற்பத்தி செய்வது கண்டு பிடிக்கபட்டது. இதனையடுத்து, அந்த தொழிற் சாலைக்கு சீல் வைக்க சீனியர் சுற்றுச்சூழல் பொறியாளர் ரமேஷ் உத்தரவிட்டார். அதன்பேரில், மாசு கட்டுபாட்டு குழும மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்த தொழிற்சாலைக்கு சீல் வைத்தனர்.

Views: - 207

0

0