தருமபுரியில் விற்பனைக்கு வைத்திருந்த கெட்டுப் போன 130 கிலோ மீன்கள் பறிமுதல்

Author: kavin kumar
18 August 2021, 6:57 pm
Quick Share

தருமபுரி: தருமபுரியில் பழைய மற்றும் கெட்டுப் போன மீன்கள் விற்பனை செய்ய வைத்திருந்த 130 கிலோ மீன்களை உணவு பாதுகாப்பு துறையினர் அழித்து, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள இறைச்சி மற்றும் மீன் கடைகளில் பழைய மீன்களை ஃபார்மலின் தெளித்து விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்பு துறைக்கு புகார்கள் வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் டாக்டர் பானு சுஜாதா மற்றும் மீன்வளத் துறை உதவி இயக்குநர் சுப்பிரமணியன் இணைந்து தருமபுரியில் சந்தைப்பேட்டை, பேருந்து நிலையங்களில் உள்ள மீன் மற்றும் இறைச்சி கடைகளில் சோதனை செய்தனர். அப்பொழுது மீன்கள் கெடாமல் இருப்பதற்காக பார்மலின் தெளிக்கப்பட்டு இருக்கிறதா என்பதை உணவு பாதுகாப்பு துறையினர் சோதனை செய்தனர். இதில் ஒரு சில கடைகளில் பழைய மீன்கள் மற்றும் கெட்டுப்போன மீன்களை விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து கெட்டுப்போன நிலையில் இருந்த பாறை, இறால், ஆற்று மீன் உள்ளிட்ட 130 கிலோ கெட்டுப்போன மீன்களை உணவு பாதுகாப்பு துறையினர் பெனாயில் ஊற்றி அளித்தனர். தொடர்ந்து பழைய மற்றும் கெட்டுப்போன மீன்கள் விற்பனைக்கு வைத்திருந்த 5 கடைகளுக்கு தலா இரண்டாயிரம் என 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர். இதனைத்தொடர்ந்து இறைச்சி மற்றும் மீன்களை இருப்பு வைத்து விற்பனை செய்யக்கூடாது என்றும், இறைச்சி மற்றும் மீன் கடைகளில் பணியாற்றுபவர்கள், கட்டாயமாக இரண்டு தவணை கொரோனா தடுப்பூசியினை போட்டிருக்க வேண்டும். மேலும் விற்பனையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றி விற்பனையைத் செய்ய வேண்டும் என உணவு பாதுகாப்பு துறையினர் அறிவுறுத்தினார்.

Views: - 215

0

0