சென்னை: சென்னையில் ஆட்டோவில் கடத்தி வந்த 4 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனர்.
சென்னை செம்பியம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்கப்படுவதாக செம்பியம் உதவி கமிஷனர் செம்பேடு பாபுவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் செம்பியம் உதவி கமிஷனரின் தனிப்படை போலீசார் மூலக்கடை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது செங்குன்றம் பகுதியில் இருந்து மூலக்கடை வழியாக ஆட்டோ ஒன்று வந்து கொண்டிருந்தது அதை மடக்கி சோதனை செய்த போது அதில் 4 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து செங்குன்றம் பகுதியை சேர்ந்த பிரபு 53 மற்றும் வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த சந்துரு 36 ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 4 கிலோ கஞ்சா மற்றும் ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது கைது செய்யப்பட்ட 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
0
0