குடோனில் பதுக்கி வைத்திருந்த மூன்று டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்

Author: Udayaraman
26 July 2021, 5:54 pm
Quick Share

திருவள்ளூர்: செங்குன்றம் அருகே குடோன் அமைத்து பதுக்கி வைத்திருந்த 30 லட்ச ரூபாய்மதிப்பிலான மூன்று டன் செம்மரக் கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்து, தப்பியோடிய செம்மர கடத்தல் கும்பலை தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே உள்ள கோணிமேடு பகுதியில் எ.எம் அகம்மது அன்ட்கோ என்ற இடத்தில் வெங்காய குடோன் செயல்பட்டு வந்தது. கொரோனா காரணத்தால் குடோன் மூடப்பட்ட நிலையில் அதில் ஆந்திர மாநிலத்திலிருந்து செம்மரங்களை வெட்டி கடத்திவந்து பதுக்கி வைத்து வீட்டினை போல் பயன்படுத்தி அட்டைப் பெட்டிகளில் அடைத்தும், செம்மரங்களை தூள்களாக பவுடர் போன்று அரைத்தும் மூட்டைகளில் வெளிநாடுளுக்கு கடத்தி வருவதாக மாவட்ட வனத்துறை அலுவலகத்திற்கு வந்த ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் வனத்துறையினர் அங்கு சோதனைமேற்கொண்டதில், சுமார் 3 டன் எடை கொண்ட 30 லட்ச ரூபாய் மதிப்பிலான உயர்ரக செம்மரங்கள் மற்றும் செம்மரங்களின் அடிப்பகுதி வேர்கள் ஒரு மூட்டை செம்மர துகள்கள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர். மேலும் செம்மரக்கடத்தலில் ஈடுபட்டு தப்பியோடிய கும்பலை வனத்துறையினர் தேடி வருகின்றனர். செம்மர கடத்தல் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மேலும் குடோன் உரிமையாளர் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் குடோன் அமைத்து செம்மரங்கள் கடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 92

0

0