ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட 149 மதுபான பாட்டில்கள் பறிமுதல்: 2 பெண்கள் உள்ளிட்ட மூன்று பேர் கைது

24 August 2020, 5:11 pm
Quick Share

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே ஆட்டோவில் மதுபானங்களை கடத்தி வந்து இரண்டு பெண்கள் ஓட்டுனர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பென்னலூர்பேட்டை அருகே காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது அவ்வழியாக சந்தேகத்திற்கு இடமாகவந்த வாகனத்தை மறித்து சோதனை செய்தனர். அதில் திருவள்ளூரில் இருந்து 149 மது பாட்டில்களை சட்டவிரோதமாக ஆட்டோவில் பதுக்கி விற்பனைக்காக கொண்டு சென்றது தெரியவந்தது.

இதை அடுத்து நம்பாக்கம் பகுதியை சார்ந்த ஆட்டோ ஓட்டுனர் மகேந்திரன், பத்மா, வைலட் ஆகிய மூன்று பேரை கைது செய்த பெண்ணாலூர்பேட்டை போலீசார் ஆட்டோவையும் மதுபானங்களையும் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆட்டோவில் மதுபானங்களை கடத்தி வந்து இரண்டு பெண்கள் ஓட்டுனர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 10

0

0