லாரியில் கடத்திவரப்பட்ட 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்…

4 August 2020, 3:01 pm
Quick Share

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே போலி பதிவுஎண் கொண்ட லாரியின் மூலம் கடத்தி வரப்பட்ட 15 டன் ரேஷன் அரிசியை கடத்தல் பறக்கும் படை தனிவட்டாச்சியர் பழனி தலைமையிலான அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் வேலூர் – திருப்பத்தூர் மாவட்ட எல்லையில் ஆம்பூர் பறக்கும்படை தனிவட்டாச்சியர் பழனி தலைமையிலான அதிகாரிகள் இன்று வாகனத்தணிக்கையில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது சோதனை சாவடியிலிருந்து 100 மீட்டர் தொலைவில் வேலூரிலிருந்து ஆம்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த லாரி சோதனை சாவடி அதிகாரிகளை கண்டதும் லாரி ஓட்டுநர் லாரியை நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.


உடனடியாக சந்தேகத்தின் பேரில், லாரியில் சோதனை மேற்க்கொண்ட அதிகாரிகள் லாரியில் 15 டன் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. மேலும் லாரியின் பதிவுஎண் கொண்டு விசாரணை மேற்க்கொண்ட போது அது போலி பதிவுஎண் என்பது தெரியவந்தது. உடனடியாக லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள் ஆம்பூர் வட்டாச்சியர் பத்மநாபனிடம் ஒப்படைத்தனர். பின்னர் லாரி ஆம்பூர் நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

Views: - 4

0

0