21 டன் ரேஷன் அரிசியை லாரியுடன் பறிமுதல்: அரிசி கடத்திய 2 பேர் தப்பியோட்டம்

Author: kavin kumar
6 August 2021, 3:29 pm
Quick Share

வேலூர்: காட்பாடி கிறிஸ்டியான்பேட்டையில் 21 டன் ரேஷன் அரிசியை லாரியுடன் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

வேலூர் மாவட்டம்,வேலூர் பிள்ளையார்குப்பம் வழியாக சென்னையிலிருந்து – கர்நாடகாவுக்கு லாரி ஒன்றில் ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்துவதாக மாவட்ட ஆட்சியருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் பறக்கும் படை வட்டாச்சியர் கோட்டீஸ்வரன் பிள்ளையார்குப்பம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது லாரி ஒன்று நிற்காமல் வேகமாக சென்றது.

அதனை அதிகாரிகள் துரத்தி பின் தொடர்ந்து சென்றனர் காட்பாடியில் தமிழக ஆந்திர எல்லையை ஒட்டியுள்ள கிறிஸ்டியான்பேட்டையில் லாரியை இரண்டு பேர் நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். பின்னர் லாரியை சோதனை செய்த போது அதில் 21 டன் ரேஷன் அரிசி இருந்தது. அதனை அதிகாரிகள் லாரியுடன் பறிமுதல் செய்து வேலூர் நுகர் பொருள் வாணிப கழகத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து காட்பாடி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து அரிசியை கடத்தி வந்து தப்பி ஓடிய இருவரை தேடி வருகின்றனர்.

Views: - 615

0

0