3 டன் குட்கா பான்மசாலா பறிமுதல்: பதுக்கி விற்பனை செய்த நபர் கைது..!!!

9 May 2021, 9:36 pm
Quick Share

செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகரில் தனிவீடு எடுத்து குட்கா பான் மசாலா போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களை பதுக்கி விற்பனை செய்த நபர் கைது : 3 டன் குட்கா பான்மசாலா பறிமுதல்..!!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள சிறு வியாபாரிகள் செங்கல்பட்டு பகுதியில் மொத்த விற்பனை மையங்களில் பொருட்களை தினந்தோறும் வாங்கிச் செல்கின்றனர். இதை பயன்படுத்தி செங்கல்பட்டு நகர பகுதியில் உள்ள சின்னம்மன் கோவில் தெருவில் பசுபதி (40) என்பவர் தனி வீடு எடுத்து பான் மசாலா குட்கா ஆகிய பொருட்களை பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி விற்பனை செய்து வந்துள்ளார்.

கடந்த மூன்று மாதகாலமாக செங்கல்பட்டு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பான்மசாலா குட்கா ஆகிய பொருட்கள் எளிதில் கிடைப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் செங்கல்பட்டு நகர போலீசார் நகர் முழுவதும் தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சின்னஅம்மன் கோவில் தெரு பகுதியில் தனியாக வீடு எடுத்து குட்கா பொருட்களை பதுக்கி விற்பனை செய்த பசுபதி என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து குட்கா பான்மசாலா போன்ற தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்தியதில் போதைப் பொருளின் விலை மதிப்பு சுமார் 15 லட்சம் ரூபாய் என கணக்கிடப்பட்டது.

Views: - 106

0

0