சட்டவிரோதமாக விற்பனைக்கு பதுக்கி வைத்த 500 கிலோ புகையிலை மற்றும் குட்கா பறிமுதல்

Author: kavin kumar
9 August 2021, 5:56 pm
Quick Share

அரியலூர்: அரியலூர் அருகே சட்டவிரோதமாக விற்பனைக்கு பதுக்கி வைத்த 500 கிலோ புகையிலை மற்றும் குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அரியலூர் மாவட்டம் பொய்யாதநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் குபேந்திரன். இவர் அரியலூரில் உள்ள கடைகளில் ஹான்ஸ் மற்றும் குட்கா விற்பனைக்கு கொடுத்த போது அரியலூர் டி.எஸ்.பி மதன் அவர்களின் தலைமையிலான போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவரிடம் விசாரணையில், ஈடுபட்டபோது வெளி மாவட்டத்தில் இருந்து ஹான்ஸ் மற்றும் குட்கா வாங்கி பொய்யாதநல்லூரில் உள்ள வீட்டில் பதுக்கி வைத்து அதனை கடைகளுக்கு விற்பனைக்கு கொடுத்தது தெரியவந்தது. இதனையடுத்து அரியலூர் போலீசார் நடத்திய சோதனையில் 500 கிலோ ஹான்ஸ் மற்றும் குட்காவை பறிமுதல் செய்யபட்டது. மேலும் ஒன்னரை லட்சம் ரூபாய் பணத்தினை பறிமுதல் செய்த காவலர்கள் தொடர்ந்து குபேந்திரன் மற்றும் பரூக் ஆகியோரிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Views: - 221

0

0