கணக்கில் வராத வெள்ளிப்பொருட்கள் மற்றும் பணம் பறிமுதல்

Author: Udhayakumar Raman
19 September 2021, 7:56 pm
Quick Share

கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் அருகே தேர்தல் பறக்கும் படை சோதனையில் கணக்கில் வராத வெள்ளிப்பொருட்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம்- திருவண்ணாமலை சாலையில் மூங்கில்துறைப்பட்டு கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு தேர்தல் பறக்கும் படையை சேர்ந்த தனி வட்டாட்சியர் ராஜலட்சுமி தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் பாஸ்கர், மற்றும் காவலர்கள் இன்று வாகன சோதனை செய்தனர். அப்போது சங்கராபுரம் நகரத்தை சேர்ந்த வெள்ளி வியாபாரி செல்வராஜ் மகன் சரவணன் என்பவர் திருவண்ணாமலைக்கு நோக்கி காரில் வந்தவரை நிறுத்தி சோதனை செய்த போது, கணக்கில்லாமல் வைத்திருந்த ரூ 57 ஆயிரம் பணம் மற்றும் புது வெள்ளி நகைகள் 1 கிலோ 804 கிராம் , பழைய வெள்ளி நகைகள் 4 கிலோ 355 கிராம் கைப்பற்றப்பட்டு சங்கராபுரம் தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜேந்திரனிடம் ஒப்படைத்துள்ளனர்.

Views: - 104

0

0