சரக்கு வாகனத்தில் கடத்தி செல்லப்பட்ட 700 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்

Author: Udhayakumar Raman
26 September 2021, 7:56 pm
Quick Share

திருவள்ளூர்: மீஞ்சூரில் சரக்கு வாகனத்தில் கடத்தி செல்லப்பட்ட தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 700 கிலோ குட்கா புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, சென்னையை சேர்ந்த இருவரை கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில்காவல்துறையினர் வாகன சோதனை மேற்கொண்ட போது சென்னையிலிருந்து வேகமாக வந்த சரக்கு வாகனத்தை மடக்கி சோதனை மேற்கொண்ட போது அதில் தமிழக அரசால்தடைசெய்யப்பட்ட சுமார் 700 கிலோ எடையுள்ள 54 பைகளில் இருந்த புகையிலை பான்குட்கா பொருட்கள் இருப்பதுதெரியவந்ததை தொடர்ந்து போலீசார் அதனை பறிமுதல் செய்து ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த வாகன ஓட்டுனர் கேசய்யா மற்றும் அவருடன் வந்த வெங்கல் ரெட்டி இருவரை கைது செய்து அதனை எங்கு கொண்டு செல்கின்றனர் என்பது குறித்தும்அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரண்டு லட்ச ரூபாய் மதிப்பிலான 700 கிலோ குட்கா புகையிலைபொருட்கள் சரக்கு வாகனத்துடன் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மீஞ்சூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 109

0

0