அடுக்கு மாடி குடியிருப்பில் பதுக்கி வைத்திருந்த 81 கிலோ குட்கா பறிமுதல்:வடமாநில நபர் கைது…

Author: kavin kumar
8 August 2021, 1:58 pm
Quick Share

சென்னை: சென்னையில் அடுக்கு மாடி குடியிருப்பில் பதுக்கி வைத்திருந்த குட்காவை வடமாநில நபரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்த 81 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.

தமிழக அரசால் தடை செய்யப் பட்ட குட்கா , மாவா , ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னை பெரு நகரக் காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் , ‘‘புகையிலைப் பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை‘‘ (DABToP -Drive Against Banned Tobacco Products) என்ற திட்டம் தொடங்கப்பட்டு , காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாகக் கண்காணித்து , சென்னை பெருநகரில் குட்கா, மாவா, ஹான்ஸ் ஆகிய தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களைக் கடத்தி வருபவர் கள், விற்பனை செய்பவர்களைக் கண்காணித்து , கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, செம்பியம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் , காவல் குழுவினர் பெரம்பூர் ஃபாக்சன் தெருவில் உள்ள JS பிளாட்ஸ் என்ற முகவரியில் உள்ள வீட்டைக் கண்காணித்த போது அங்கு ரகசியமாக குட்கா புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. அதன்பேரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சட்ட விரோதமான குட்கா புகையிலை பாக்கெட்டுகளை விற்பனை செய்த ஶ்ரீகாந்த் (எ) சோனு வயது 30 என்பவரைக் கைது செய்தனர்.

வீட்டில் சோதனை மேற்கொண்டு 81 கிலோ எடை கொண்ட ஹான்ஸ் , கூலிப் , எம்.டி.எம்., ஸ்வாகத் உள்ளிட்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் குற்றவாளி ஶ்ரீகாந்த் (எ) சோனு, உத்தரப் பிரதேச மாநிலம், ஆக்ராவைச் சேர்ந்தவர் என்பதும், சென்னை யில் கேட்டரிங் வேலை செய்து கொண்டு, சட்ட விரோத மாக குட்கா புகையிலை பாக்கெட்டுகளை வீட்டில் பதுக்கி வைத்து விற்று வந்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட ஶ்ரீகாந்த் (எ) சோனு விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப் பட்டு சிறையில் அடைத்தனர்.

Views: - 179

0

0