ஆந்திராவில் இருந்து கடத்திவரப்பட்ட போதை மாத்திரைகள் பறிமுதல்: கடத்தலில் ஈடுபட்ட சென்னையை சேர்ந்த 2 இளைஞர்கள் கைது

4 November 2020, 2:46 pm
Quick Share

திருவள்ளூர்: ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு கடத்திந்த போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்து, கடத்தலில் ஈடுபட்ட சென்னையை சேர்ந்த 2 இளைஞர்களை கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் எளாவூர் ஒருங்கிணைந்த நவீன சோதனைச் சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திராவில் இருந்து தமிழகத்தை நோக்கி வந்த இருசக்கர வாகனத்தை சோதனை செய்ததில் ஆந்திரமாநிலம் வரதயபாளையத்திலிருந்து கடத்திவரப்பட்ட 430 போதை மாத்திரைகளும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

போதை மாத்திரை கடத்தலில் ஈடுபட்ட சென்னை கொடுங்கையூரை சேர்ந்த அஜய்குமார், சூர்யா ஆகியோரை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு கஞ்சா கடத்தி வருவதை போலீசார் தொடர்ந்து பறிமுதல் செய்து வரும் நிலையில், தற்போது கஞ்சா போதை க்கு பதிலாக மாத்திரைகளை போதையாக பயன்படுத்த கடத்தி வரும் சம்பவம் தற்போது தொடர்கதையாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.

Views: - 14

0

0