7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல்

3 March 2021, 8:57 pm
Quick Share

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் அரசால் தடை செய்யப்பட்ட 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி வாலாஜா காவல் துறையினர் வாலாஜா சுங்கச்சாவடி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் சந்தேகத்திற்கு விதமாக பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி வந்த அசோக் லைலாண்ட் மினி லோடு ஆட்டோ மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.

அதில் அரசால் தடை செய்யப்பட்ட 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 11/2 டன் எடை கொண்ட போதைப் பொருட்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து வாலாஜாபேட்டை காவல்துறையினர் போதைப்பொருள் மற்றும் அதனை கடத்தி வர பயன்படுத்தப்பட்ட வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும் போதைப்பொருள் கடத்தல் வாகனத்தை ஓட்டி வந்த சின்னத்தம்பி மற்றும் வில்சன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Views: - 0

0

0