குன்னூரில் எவர் சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்

6 March 2021, 1:31 pm
Quick Share

நீலகிரி: குன்னூரில் பறக்கும் படை அதிகாரிகள் மூன்று லட்சம் ரூபாய் மதிப்பிலான எவர் சில்வர் பாத்திரங்களை பறிமுதல் செய்தனர்.

தமிழகம் முழுவதும் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் குறிப்பிட்ட அளவிற்கு மேல் பொருட்கள் மற்றும் பணம் எடுத்து வருவதற்கு விதிமுறைகள் உள்ளன. மேலும் நீலகிரி நுழைவாயில்களான பர்லியார், குஞ்சப்பணை போன்ற சோதனை சாவடிகளில் பறக்கும் படையினர் இரவும் பகலுமாக அனைத்து வாகனங்களையும் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் சமவெளி பகுதியில் இருந்து குன்னூருக்கு எவர்சில்வர் பாத்திரம் ஏற்றி வந்த லாரியை பர்லியார் சோதனை சாவடியில் பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். பின்பு இதனை குன்னூர் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதில் உரிய ஆவணங்கள் சமர்பிக்கப்பட்ட பின்பு வாகனம் விடுவிக்கப்படும் என்று கோட்டாட்சியர் ரஞ்சித் சிங் தெரிவித்தார்.

Views: - 1

0

0