ஆந்திராவுக்கு கடத்த இருந்த ஐந்து டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவர் கைது

18 April 2021, 1:54 pm
Quick Share

வேலூர்: வேலூரில் இருற்து ஆந்திராவுக்கு கடத்த இருந்த ஐந்து டன் ரேஷன் அரிசியை உணவு கடத்தல் தடுப்பு பிரிவினர் பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனர்.

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகில் வட்டாச்சியர் தலைமையில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவினர் வாகன சோதனை செய்தனர். அப்போது காஞ்சிபுரம் மாவடத்தில் இருந்த ஆந்திராவுக்கு கடத்த எடுத்து சென்ற ஐந்து டன் ரேஷன் அரிசி மூட்டைகளை லாரியுடன் பறிமுதல் செய்து, தொரப்பாடியில் உள்ள தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர் அரிசி கடத்தலில் ஈடுபட்ட காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த சிறுகாவேரிப்பாக்கத்தை சேர்ந்த ஓட்டுநர்கள் தினேஷ் மற்றும் வெற்றிவேலை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

Views: - 22

0

0