20 லட்சம் மதிப்பிலான குட்கா, பான்மசாலா பொருட்கள் பறிமுதல்: 5 பேர் கைது

Author: Udayaraman
29 July 2021, 6:52 pm
Quick Share

திருச்சி: திருச்சியில் தடை செய்யப்பட்ட 20 லட்சம் மதிப்பிலான குட்கா, பான்மசாலா மூட்டை முட்டையாக தனிப்படை காவல்துறையினர் பறிமுதல் செய்து, 5 பேரை கைது செய்தனர்.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனையை தடுக்க திருச்சி மாநகர காவல்துறை சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாலக்கரை பகுதியில் உள்ள பென்சர் காலணி, மற்றும் எடத்தெரு ஆகிய இடங்களில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட பொருட்கள் குடோன்களில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தனிப்படை காவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்து. தகவலின் அடிப்படையில் தனிப்படை காவல்துறையினர் மற்றும் பாலக்கரை காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது குடோன்களில் 55 மூட்டைகளில் சுமார் 1800 கிலோ,

20 லட்சம் மதிப்புள்ள தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் பான்மசாலா போன்ற போதை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை பறிமுதல் செய்தனர். மேலும் பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்ட பூமிநாதன், இளங்கோ, வடிவேல் ஹரிஹரன், பழனி குமார் ஆகிய 5 நபர்களையும் 3 பிரிவுகரில் வழக்குப் செய்து கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் பயன்படுத்திய நான்கு சக்கர வாகனம், இருசக்கர வாகனம் மற்றும் நான்கு செல்போன்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக திருச்சி மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை சார்பாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 123

0

0